தேவகோட்டை: கிரவல் குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

525பார்த்தது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, நெடோடை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கிரவல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார் கோவில் அருகே புலியடித்தம்பம் பகுதியில் சாலை ஓரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு “நீராதாரங்களை காப்பாற்றுங்கள்”, “விவசாயத்தை பாதுகாப்போம்”, “குவாரி அனுமதியை ரத்து செய்க” என முழக்கங்கள் எழுப்பினர்.