சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்குடி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல், முழங்கால் அளவு தேங்கி நிற்கும் கண்மாய் நீரில் சுமந்து கொண்டு கயிறு கட்டி எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, கிராம மக்கள் முறையான பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.