காரைக்குடியில் வசிக்கும் சிவகங்கை மாவட்ட பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி ராஜேஸ்வரி, வீட்டில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து அழகாப்பாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.