தாழ்வாக செல்லும் என் கம்பியால் விவசாயிகள் அவதி

249பார்த்தது
தாழ்வாக செல்லும் என் கம்பியால் விவசாயிகள் அவதி
தேவகோட்டை அருகே கோட்டை கிராமத்தில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதியின் வழியாக செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் ஆட்கள் மூலமே அறுவடை செய்ய வேண்டியுள்ளது. கோடை காலம் என்பதால் தற்போது விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இந்த சமயத்தில் மின்வாரியத்தினர் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி