கால்வாய் தூர் வாராமல் இருப்பதால் விவசாயிகள் அவதி

81பார்த்தது
கால்வாய் தூர் வாராமல் இருப்பதால் விவசாயிகள் அவதி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நேற்று முன்தினம்(செப்.30) கன மழை பெய்தது, இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தேவகோட்டையில் இருந்து சுமார் 18 கிராமங்களுக்கு செல்லும் கால்வாயில் தூர்வாராமல் புதர் மண்டி கிடப்பதால் தண்ணீர் போக வழி இன்றி தண்ணீர் நகருக்குள் வந்தது. கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.