சவுதியில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

335பார்த்தது
சவுதியில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூரைச் சேர்ந்த சரவணகுமார் (49) சவூதி அரேபியாவில் பணியாற்றியபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிர் பிரவாசி சங்கம் சார்பில் ரூ. 5.66 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. சிவகங்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், சரவணகுமாரின் மனைவி சரிதாவிடம் நிதியை வழங்கினார். அவரது மகன், மகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி