காரைக்குடி அருகே செஞ்சை பகுதியில் இயங்கி வந்த சிட்டி பேக்கரி பிஸ்கட் கம்பெனியில், நீதிமன்ற உத்தரவை மீறி மாற்று வழியில் செயல்பட்டதால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சீல் வைக்கப்பட்ட கம்பெனியை திறந்த உரிமையாளர் அஜ்மீர் மீது தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.