காரைக்குடி அரசு
போக்குவரத்து கிளையில் நடத்துனராக பணிபுரியும் நவநீதகிருஷ்ணன் (55), காரைக்குடி - திருப்பத்தூர் - மதுரை பேருந்தில் பயணிகளிடம் கனிவாகவும், மென்மையாகவும் பேசி, பேருந்தின் பயணம், கட்டணம் செலுத்தும் முறை குறித்து விளக்கி அவர்களைக் கவரும் வகையில் செயல்படுகிறார். இவரது இந்த செயல் அரசு பேருந்து பயணிகளால் பெரிதும் பாராட்டப்படுகிறது. இவர் பணிபுரியும் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார்.