காரைக்குடி அருகே அரியக்குடி அரசு பள்ளி மாணவர்கள் 'வீகோ சேட்டிலைட்' என்ற பெயரில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். சுமார் 20 கிலோமீட்டர் உயரம் பறந்த இந்த செயற்கைக்கோள், பூமியில் உள்ள மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை தாக்கும் பூஞ்சைகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. மூன்று மணி நேர ஆய்வுக்குப் பிறகு, மதுரை அருகே வீக்கோ சாட்டிலைட் தரையிறக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை மாணவர்கள் தொடர்ந்து ஆராய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.