கிராவல் குவாரி விவகாரம்: கனிமவளத் துறை அலட்சியம்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே உறுதிகோட்டை கிராமத்தில் செயல்படும் கிராவல் குவாரிக்கு எதிராக கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குவாரி செயல்பாட்டால் நீர்நிலைகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தும் தீர்வு காணப்படவில்லை. தீர்ப்பு வரும் வரை பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் குவாரி செயல்படுவதாகக் கூறப்படுகிறது. கனிமவளத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், மக்களிடம் மரியாதையற்ற முறையில் பேசுவதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பதுடன், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அரசு ஆவணங்களை ஒப்படைத்து தீவிர போராட்டம் நடத்தப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி