காரைக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்த பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த அடையாள அட்டை மூலம் விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவி, மகப்பேறு நலன், முதியோர் ஓய்வூதியம், வீட்டு மானியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்றும், வரும் காலங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என்றும், அவர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் முறையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.