சிவகங்கை: வெயில் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - ஆட்சியர் தகவல்

70பார்த்தது
சிவகங்கை: வெயில் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும், தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். அதில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வழிமுறைகளாக நண்பகல் 12. 00 மணி முதல் மாலை 3. 00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும், தாகம் ஏற்படாமல் இருந்தாலும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடித்தல் வேண்டும், தேனீர், காப்பி, கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து ஓ. ஆர். எஸ். எலுமிச்சை ஜுஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். வெப்ப தாக்கத்தை மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி