அழகப்பா பல்கலைக்கழகத்தில் சா்வதேசக் கருத்தரங்கம்

53பார்த்தது
அழகப்பா பல்கலைக்கழகத்தில் சா்வதேசக் கருத்தரங்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 'செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கல்வியை வழி நடத்தும் புதுமைகள்' என்ற சா்வதேசக் கருத்தரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. இரு நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி தொடங்கி வைத்துப் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தளத்தில் இந்தியா பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஒருங்கிணைந்த 'சிப்' உருவாக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த உற்பத்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினாா். தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் பதிப்புத் துறைத் தலைவா் சீனிவாசன், உலக நிறுவனங்களின் அறிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை இணைத்த தரவுகள் சோ்க்கப்பட்டுள்ளன என்றும், இதன் தேவையை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினாா். நேபாள நாட்டின் காட்மாண்டு பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவா் லக்மன் நவாலி, மும்பை பல்கலைக்கழக முத்த பேராசிரியா் சுனிதா விதாலரால் மகரி, அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் எம். ஜோதிபாசு ஆகியோரும் உரையாற்றினா்.

தொடர்புடைய செய்தி