தேவகோட்டை: ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

56பார்த்தது
தேவகோட்டை: ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணாசாலை பகுதிகளில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் பூஜை செய்த கலசங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஸ்ரீ காமாட்சியம்மன், கனக துர்க்கை, தம்பதி தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்கள் மூலவர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி