சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கைலாசநாதபுரம் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நவம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கியது. நவம்பர் 9 ஆம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. இன்று நவம்பர் 10 ஆம் தேதி நான்காம் கால யாக பூஜை, கோபூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடத்தப்பட்டு, புனித கலச நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல், வீரவேல் கோஷங்களுடன் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.