சிவகங்கை: அழுகிய நிலையில் ஆண் சடலம்.. போலீசார் விசாரணை

69பார்த்தது
சிவகங்கை: அழுகிய நிலையில் ஆண் சடலம்.. போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் நீர்நிலைகள் மழை நீர் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் மணிமுத்தாறில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, மாவட்ட நிர்வாகம் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளியல், மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் தேவகோட்டை ஆற்றுப்பாலம் மணிமுத்தாறில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்துள்ளது, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவல் அறிந்த தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி