பிறந்த வீட்டு பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மாசி படையல் விழா

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாவிழியம்மன் கோவிலில், பிறந்த வீட்டு பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் மாசி படையல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், பிறந்த வீட்டு பெண்களை புகுந்த வீட்டு பெண்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்று, பரிவார தெய்வங்களுக்கு மாசி படையலிட்டு வழிபாடு செய்தனர். கோயில் வளாகத்தில், பிறந்த வீட்டு பெண்கள் மற்றும் உறவினர்களுக்கு அறுசுவை அசைவ உணவு பரிமாறப்பட்டது.

தொடர்புடைய செய்தி