கருப்பர் திருக்கோவிலில் மாசி பாரி வேட்டை உற்சவ விழா

290பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பணக்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவிலில் மாசி பாரி வேட்டை உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மூலவர் கருப்பர் சுவாமிக்கு வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கரும்புத்தொட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு கும்மியடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோவில் பூசாரி கருப்பர் வேடம் அணிந்து சாமி ஆடியபடி வலம் வந்தார். குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் பக்தர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு எலுமிச்சை பழம் மற்றும் பூ மாலைகளை ஏலம் எடுத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி