காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கழிவறைகள் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஆணையாளர் சங்கரனை அழைத்து உடனடியாக அவற்றைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டார். மேலும், பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதாகி இருப்பதைச் சரிசெய்து குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தினார்.