காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டாக்டர்
பிரபு, மக்களிடம் ஒரு வாய்ப்பு கேட்டதாகவும், அவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததாகவும் தெரிவித்தார். தான் லஞ்சம், ஊழல், கமிஷன் வாங்க மாட்டேன் என்றும், காரைக்குடி சட்டமன்றத்தில் ஒரே ஒரு 'பவர் சென்டர்' மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தனக்கு நெருக்கமானவர்கள் என கூறி யாரும் தவறான செயல்களில் ஈடுபட முயன்றால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.