புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்காக காரைக்குடி ரயில் நிலையத்திற்கு புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலை எளிதாக அடைய இந்த சேவை உதவும். தேவகோட்டையில் இருந்து புறப்படும் பேருந்து, அரியக்குடி பெருமாள் கோவில் வழியாக காரைக்குடி ரயில் நிலையம் சென்று பயணிகளை இறக்கி, பின்னர் மதுரை நோக்கி இயக்கப்படும். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, அரியக்குடி திருவேங்கடமுடையார் பெருமாள் கோவில் வாசலில் இந்தப் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.