சிவகங்கை: அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ

67பார்த்தது
தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு 7வது நாளாக பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு அமைந்தவுடன் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி