மங்காம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

264பார்த்தது
மங்காம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
சிவகங்கை மாவட்டம், மங்காம்பட்டியில் சந்தனமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து 15 காளைகளும், 135 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் 9 வீரர்கள் காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது.