காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் 277 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக அரசுக்கு மக்கள் பேராதரவு இருப்பதாகவும், அதிமுக தேர்தல் களத்தில் இருக்கிறோம் என்பதற்காக தவணை முறையில் வாக்குறுதிகளை அறிவித்துள்ளதாகவும் கூறினார். கடந்த காலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுகவின் அறிவிப்புகளை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பதட்டத்தின் உச்சத்தில் இருப்பதால் இவ்வாறு அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்றும் தெரிவித்தார். திமுக கருத்து கேட்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் திமுக தேர்தல் அறிக்கையை தலைவர் வெளியிடுவார் என்றும் கூறினார்.