கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டி சென்றதால் மக்கள் அவதி

0பார்த்தது
காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சியின் வீரமுத்துபுரம் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கட்டுமானப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும், சாலை அமைக்கும் பணிகள் தொடங்காததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விரைந்து சாலைப் பணிகளைத் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி