சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான விஜயபிரியா என்ற இளம்பெண், வீட்டில் இருந்து "கடைக்கு சென்று வருகிறேன்" என கூறி வெளியே சென்றார். ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை சுற்றியுள்ள பகுதிகளில் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடியும் எங்கேயும் கிடைக்காததால், இளம்பெண்ணின் சகோதரர் சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கலா ராணி வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன இளம் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.