சிவகங்கை: மணல் திருட்டு; போலீசார் விசாரணை

83பார்த்தது
சிவகங்கை: மணல் திருட்டு; போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிறுநல்லூர் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக சிறுநல்லூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முப்பையூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருட்டுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you