காரைக்குடி ஜீவா நகர் பகுதியில் ராமேஸ்வரத்திலிருந்து மீன் ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனம் ஓட்டி வந்த லட்சுமணன் சிறு காயத்துடன் தப்பினார். மின்கம்பம் வாகனம் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிகாலை முதல் அவதி அடைந்தனர். மின்வாரிய ஊழியர்கள் தற்போது மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.