சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் பர்மா காலனி பேருந்து நிறுத்தம் அருகே மதுபான கடை மற்றும் பார் திறப்பதை கண்டித்து, அப்பகுதி மக்கள் இன்று (18/11/25) செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி இதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.