மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு கடைகளை அடைத்து போராட்டம்

3பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியில், குடியிருப்பு, பேருந்து நிறுத்தம், மருத்துவமனைகள், கோவில்கள் உள்ள இடத்தில் தனியார் மதுபான கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வட்டாட்சியர் கடை திறக்கப்படாது என உறுதி அளித்த நிலையில், காவல்துறை மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கடந்த இரண்டு நாட்களாக மறைமுகமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். மேலும், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you