ரயில் நிலையம் ரூ. 20 கோடி செலவில் மறு சீரமைப்பு

2பார்த்தது
ரயில் நிலையம் ரூ. 20 கோடி செலவில் மறு சீரமைப்பு
காரைக்குடி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 20.34 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தினந்தோறும் 6000 பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில், புதிய தோரண நுழைவாயில்கள், விசாலமான மேற்கூரை, செட்டிநாடு பாணியில் மூடப்பட்ட நடைபாதை, வெளிவளாக மேம்பாடு, நவீன முகப்பு, 6 மீட்டர் அகல புதிய நடை மேம்பாலம், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், 3 மின் தூக்கிகள், உள்ளூர் கலாச்சாரத்தை விளக்கும் ஓவியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், வாகன நிறுத்துமிடம், குடிநீர் குழாய்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி