ராமநவமி பிரம்மோற்சவ தேரோட்டம்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள பழமையான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. "கோவிந்தா" என முழக்கமிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து, தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தனர். விழாவில் தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி