சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் அமைந்துள்ள நாகூர் தர்கா என்று அழைக்கப்படும் மகான் நாகூர் ஹஜ்ரத் சாகுல் ஹமீது வலியுல்லாஹ் தர்காவில் 93 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கடந்த டிசம்பர் 02 ஆம் தேதி அன்று கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 21 ஆம் தேதியான நேற்று சந்தனம் பூசும் நிகழ்வும் வண்ண விளக்கு கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலம் காந்தி ரோடு, ஒத்தக்கடை சந்திப்பு, வட்டானம் ரோடு, சிவன் கோவில் சந்திப்பு வழியாக பேருந்து நிலையம் வரை சென்று திரும்பி அதே வழியாக தர்கா வந்தடைந்தது.
சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது புகழ்பெற்ற பேண்ட் வாத்திய இசையுடன் வானவேடிக்கைகளுடன் ரபாய் நாகூர் பிச்சை தாப்ஸ் முழக்கத்துடன் குதிரைகள் நாட்டிய நடனமாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாலை நேர சந்தனக்கூடு ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் வரை சென்று தர்கா வந்தடைந்தது. இதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டனர்.