நெல் விளைச்சல் பாதிப்பு - ஆய்வு, இழப்பீடு கோரி விவசாயிகள்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையின்மை மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பயிர்கள் கருகி, விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கும் துரிதமாக இழப்பீடு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி