சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பேராட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பவானி மற்றும் சரவணகுமார் பள்ளிப் பருவம் முதல் காதலித்து வந்தனர். சிங்கப்பூரில் பணிபுரியும் சரவணகுமார், பவானியை கடலூரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தற்போது காவல் நிலையத்தில் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.