நெல்லை: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
நெல்லை: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி, மாவட்ட இணைச் செயலாளா்கள் சகிலா, கலைச்செல்வம், ஷேக் அப்துல்லா, மலா்விழி, மாவட்ட தணிக்கையாளா் குமரேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்இதேபோல, கல்லல், காளையாா்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை, திருப்புவனம், எஸ் புதூா் ஒன்றியங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டங்களில் தமிழக அரசு, கொலைக்கு காரணமானவா்களைக் கைது செய்ய வேண்டும். ஊராட்சி செயலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தொடர்புடைய செய்தி