சிவஸ்ரீ பட்டுக் குருக்கள் 26 ஆம் ஆண்டு குருபூஜை

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சிவஸ்ரீ பட்டுக்குருக்கள் அவர்களின் 26ஆம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவில் அவரது திருவுருவப்படத்திற்கு குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து திருமண மண்டபத்தில் முற்றோதல் பூஜை மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அன்னதானம் நடைபெற்றது. மாலையில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் அஷ்வத்தாமன் 'தேசம் காக்கும் சனாதனம்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இதில் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி