சிவகங்கை: ஆன்லைன் முதலீட்டில் ரூ.13 லட்சத்திற்கு மேல் மோசடி

1பார்த்தது
சிவகங்கை: ஆன்லைன் முதலீட்டில் ரூ.13 லட்சத்திற்கு மேல் மோசடி
சிவகங்கை மாவட்டத்தில் ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என நம்பி இருவர் சுமார் ரூ.13 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர். காராம்போடை கிராமத்தைச் சேர்ந்த ராஜா, கடந்த மாதம் 25-ஆம் தேதி இணையவழி முதலீடு குறித்த செய்தியைப் பெற்று, ரூ.5 லட்சத்து 7 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இதேபோல், காரைக்குடி அருகே கோட்டையூரைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வி, டெலிகிராம் செயலி மூலம் ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 200-ஐ முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இருவரின் புகாரை அடுத்து சிவகங்கை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி