காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா காதி நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியை மரிய கலைச்செல்வி, கணவர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்ட நிலையில், மர்ம நபர்கள் அவரது வாய் மற்றும் கால்களை துணியால் கட்டி, கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயின், தோடு, வளையல் மற்றும் பீரோவில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ரூ. 10,000 ஆகியவற்றைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். கைகளில் இருந்த கட்டுகளை அவிழ்த்து வெளியே வந்து கூச்சலிட்ட ஆசிரியை அளித்த தகவலின் பேரில், சோமநாதபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.