தவெக தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 10-ம் தேதி காரைக்குடியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார். இதற்காக காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தவெக தொண்டர்கள் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் இந்த வருகை தென் மாவட்டங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.