முதல்வர் உண்மை பேசியதே கிடையாது -எச். ராஜா பேட்டி

4பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மறுக்கவில்லை என்றும், சில விளக்கங்களை மட்டுமே கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிய நிலையில், கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தை மாநில அரசின் தவறின் காரணமாகவே திருத்தி அனுப்பச் சொல்லியிருப்பதாக அவர் கூறினார். மதுரைக்கு மின்சார பேருந்து போதுமென்ற மாநில அரசு, மத்திய அரசை குறை சொல்லும் நோக்கத்திற்காகவே மெட்ரோ திட்டத்தை அனுப்பியதாகவும், முதல்வர் ஒரு வரி கூட உண்மை பேசியதில்லை என்றும், அவர் ஒரு பொய்யர் என்றும் விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடி அரசாங்கத்தை குறை சொல்லும் நோக்கத்துடன் திமுக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.