பாதயாத்திரையாகவே காரைக்குடி திரும்பிய நகரத்தார் காவடிகள்

67பார்த்தது
426 ஆண்டுகளுக்கு மேலாக பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள செட்டிநாட்டு நகரத்தார்கள், குன்றக்குடி, கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி வழியாக சுமார் 180 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக சென்று கடந்த 31ஆம் தேதி பழனி சென்றடைந்தனர். அங்கு மகம் நட்சத்திரத்தில் காவடியுடன் மலையேறி நேர்த்திக்கடனை செலுத்திய பின், 352 நகரத்தார் காவடிகளும் பழனியிலிருந்து பாதை யாத்திரையாகவே திரும்பி வந்து குன்றக்குடி வந்தடைந்தன. பின்னர் அங்கிருந்து காரைக்குடிக்கு அனைத்து காவடிகளும் வந்தடைந்தன.

தொடர்புடைய செய்தி