சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் உடல், திருச்சி மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டயானா (17) என கண்டறியப்பட்டது. அவர் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விபத்து நடந்ததை அறிந்த போலீசார், மாணவியின் உடலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதன்பிறகு, பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை அடையாளம் கண்டு கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.