காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் 26 ஆம் ஆண்டு திருக்கார்த்திகையை முன்னிட்டு, திருக்கார்த்திகை குழுவினரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சாதம், சாம்பார், ரசம், மோர், வத்த குழம்பு, கூட்டு, பொறியல், பச்சடி, அப்பளம், பாயாசம் ஆகியவை பரிமாறப்பட்டன.