சிவகங்கை: உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்

614பார்த்தது
சிவகங்கை: உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு ரூ. 50,000 மானியம் வழங்க ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் விண்ணப்பிக்கலாம். சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 30.06.2026-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி