சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே நெடுஞ்சாலைத் துறையால் நடப்பட்ட அரளிச் செடிகளுக்கு இடையே வளர்ந்துள்ள புற்கள், செடிக் கொடிகளால் கால்நடைகள் சாலையில் மேய்கின்றன. இதனால், மாடுகள் திடீரென சாலையின் இருபுறமும் நடமாடி விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலைத் துறை செடிகளைப் பராமரிக்கவும், மாடு உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.