அழகப்பா பல்கலை கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட துணைவேந்தர்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'பசுமை வளாகம்' திட்டத்தின் கீழ் 12 ஏக்கர் காலியிடங்களில் தென்னை, மகாகனி, செம்மரம் உள்ளிட்ட 12,800 மரக்கன்றுகளை துணைவேந்தர் முனைவர் ரவி, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நட்டு வைத்தனர். மண் வளத்தைப் பாதுகாக்கவும், மழை நீரைச் சேமிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக பல்கலைக்கழகம் மூன்று முறை மத்திய அரசின் 'கிரீன் கேம்பஸ்' விருதைப் பெற்றுள்ளது. நடப்படும் மரக்கன்றுகளுக்கு இடையே காய்கறிகள் பயிரிட்டு, அவற்றை கல்லூரி விடுதிகளில் பயன்படுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி