காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மதுரை நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் ஏற முயன்ற பெண் பயணியை, நடத்துனர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. மதுரை பயணிகள் ஏறிய பிறகு ஏறலாம் என்று நடத்துனர் கூறியதாகவும், இதுகுறித்து பெண் பயணி வாக்குவாதம் செய்ததாகவும் தெரிகிறது. பின்னர் பேருந்து பரிசோதகர் தலையிட்டு பெண்ணை பேருந்தில் ஏற்றியுள்ளார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட மன உளைச்சலால் பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.