புதுக்கோட்டை மீனவர்களுக்கு எச்சரிக்கை: கடலுக்கு செல்ல தடை

0பார்த்தது
புதுக்கோட்டை மீனவர்களுக்கு எச்சரிக்கை: கடலுக்கு செல்ல தடை
புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று (15.11.2025) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் கரையேற்றி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி