சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே வீரசேகரபுரம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை, பராமரிப்பின்றி மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சேதமடைந்த நிழற்குடையை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.